The “Tamil Karakalam” program, part of Kasi Tamil Sangamam 4.0, kicked off at SCSVMV University, Kanchipuram! A 10-day initiative (Dec 21-30, 2025) teaching Tamil to 30 college students from Varanasi, Uttar Pradesh.
Inauguration featured talks by Shri. Karunakaran (Deputy Registrar, IIT Madras) & Shri. G Srinivasan (Vice Chancellor, SCSVMV) on Kasi-Kanchi connections.
The event promotes Tamil language & cultural heritage. Students visited prominent cultural sites & temples in Kanchipuram & the Saswathaiswaryam Palm Leaf Manuscript Heritage Centre in SCSVMV premises.
காசி தமிழ் சங்கமம் 4.0” திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேசம், வாரணாசியைச் சேர்ந்த 30 கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் “தமிழ் கற்கலாம்” (Tamil Karakalam) எனும் 10 நாள் திட்டம், (21.12.2025 முதல் 30.12.2025 வரை) ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா பல்கலைக்கழகத்தில் துவங்கியது. முதல் நாள் நிகழ்வில் ஶ்ரீ. கருணாகரன், (இணைப்பதிவாளர், ஐஐடி சென்னை) மற்றும் ஶ்ரீ. ஜி சீனிவாசு (காஞ்சி பல்கலைகழக துணைவேந்தர்) ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு காசி காஞ்சி தொடர்புடைய செய்திகளை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வு தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் பாரம்பரியத்தை பரப்புவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகும்.
காஞ்சியில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோயில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கும் இக்குழுவினர் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் ஓலைச்சுவடி பாதுகாப்பு மையத்திற்கும் சென்று அங்கு நடந்துவரும் பணிகளை கேட்டறிந்தனர்.